Thursday , May 5 2016 4:31:55 AM
Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3

அன்.செட்டிபட்டி மஹா கும்பாபிஷேகம்

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அன்.செட்டிபட்டி

அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி,

ஸ்ரீ பெரிய மாரியம்மன்,

ஸ்ரீ அம்மன்,

ஸ்ரீ மாதேஸ்வர சுவாமி

 

ஆலய புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா அழைப்பிதழ்

பேரன்புடையிர் வணக்கம்,

     எல்லாம் வல்ல உமையொடு பாகனுடைய திருவருள் நிறைந்த வண்ணமாக அம்பிகை பல இடங்களில் பலரூபமாக பல திரு நாமம் தாங்கி வலவாறாக அருள் பாலித்து வருகிறாள் அந்த வண்ணமாக நமது அன்.செட்டிப்பட்டி என்கிற புண்ணிய பூமியில் விற்றிருந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ பெரிய மாரியம்மன், ஆலயத்தையும் பரிவற தெய்வங்களாகிய அரச வேம்பு- ஸ்ரீ கணபதி, ஸ்ரீ அம்மன், ஸ்ரீ மாதேஸ்வர சுவாமி ஆகிய தெய்வங்களுடைய ஆலயத்தையும் மிக சிறப்பான முறையில் திருப்பணிகள் செய்தும், பஞ்சவர்ணங்கள் தீட்டியும், புதிய கொடிமரம், திரு கொடி கம்பம் அமைத்தும் நிகழும் மங்களகரமான மன்மத வருடம் மாசி மாதம் 7-ஆம் நாள் 19-02-2016 வெள்ளிக்கிழமையும், திவாததி திதியும், புனர்பூச நக்ஷதிலும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுப தினத்தில் காலை 6.30 மணிக்கு மேல் 8-மணிக்குள் கும்ப லகனத்தில் ஸ்ரீ மஹா கணபதி முதலான பரிவார தெய்வங்களுடன் அருள்பாலிக்கும் ஸ்ரீ பெரிய மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் செய்திட அம்பிகையின் திருவருள் கூட்டி வைத்திருப்பதால் அனைத்து பக்த கோடி பெருமக்களும் அவசியம் வருகை தந்து அம்பிகை-ன் திருவருள் பெற்று பேரானைந்த பெருவாழ்வு வாழ அன்புடன் வருக வருக என அழைக்கிறோம்.